அரபு தாக்கு படம்

 
                                       
                                   அரபு தாக்கு படம்

படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது,துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலைத் தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாக சொல்லவிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளை பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான்.

இயக்குநர் பரதன் இயக்கிய அதிதி என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் முதன்முதலாக தமிழேத் தெரியாதபெர்குஸார் கொரல் (Berguzar Korel) என்ற அரபு நடிகைஒருவரை கதையின் நாயகியாக அறிமுகப்படுத்துகிறோம். படத்தில் தம்பி ராமைய்யா வித்தியாசமான காமெடி கேரக்டரில் நடிக்கிறார்.



அத்துடன் ரவிமரியாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கவிருக்கிறோம்.

அதேப்போல் துபாயின் நவீன அடையாளமான புர்ஜ் கலிபாவைவித்தியாசமான கோணத்தில் படமாக்கவிருக்கிறோம். இதற்காகஆகாய விமானத்தை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடங்கள் மிகுந்து காணப்படும் துபாய் ஷேக் சாயீத் சாலையிலும் முக்கியமான காட்சிகளை படமாக்கவிருக்கிறோம். துபாயைத் தவிர்த்து ஷார்ஜா, அபுதாபிஎன ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அனைத்து பகுதிகளிலும் காட்சிகளை படமாக்கவிருக்கிறோம்.

அத்துடன் ஒரு சில காட்சிகளை தமிழ்நாட்டிலும் படமாக்க எண்ணியிருக்கிறோம்.
துபாயில் தமிழ் மீது அளவற்ற பற்றுக்கொண்டிருக்கும் ஒரு அரபுப் பெண்ணை பார்த்து பிரமித்துப்போன நாயகன், அவளின் ஆசையை நிறைவேற்ற என்ன செய்கிறான்...? அரபு நாட்டுப் பெண்களை கண்கொண்டு பார்ப்பதற்கே கடுமையான தண்டணைகள் நடைமுறையில் இருக்க, அவை எதற்கும் கட்டுப்படாமல் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அப்பெண்ணின் ஆசைகளை நிறைவேற்ற நாயகன் எப்படி போராடுகிறான்?  இறுதியில் அவளது ஆசையை நிறைவேற்றினானா இல்லையா என்பதே கதையின் மையக்கரு. தமிழர்களேயில்லாத ஊரில் தமிழ் மட்டுமே தெரிந்த நாயகனின் அமரகாவியம் தான் இந்த அரபு தாக்கு என்று சுருக்கமாகச் சொல்லலாம்.


அரபு நாடுகளுக்கு சென்று திரும்பவர்களுக்கு அரபு தாக்கு என்ற சொல் பல்வேறு கோணங்களில் பரிச்சயமாகியிருக்கும். அதையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறோம். யாரும் ஊகிக்காத வகையில் படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும். படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. படத்திற்கு ரத்தீஸ் வேஹா என்ற மலையாள இசையமைப்பாளரை தமிழில் அறிமுகப்படுத்துகிறோம். ரசிகர்களை கவரும் வகையில் பெல்லி நடனம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.  இதில்காமெடி, ஆக்ஷன், லவ்,
சென்டிமெண்ட் என அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் டோட்டல் பேமிலி எண்டர்டெயினராக இப்படம் தயாராகவிருக்கிறது. என்றார் இயக்குநர் பிரான்ஸிஸ்.

இப்படத்தின் படபிடிப்பு மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது.

Comments

Popular posts from this blog

போலி பட்டம் வழங்கிய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி ஆஜர்!

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

பாம்புச் சட்டை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு!