பாம்புச் சட்டை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு!

பாம்புச் சட்டை படம் பார்த்துவிட்டு, அந்தப் படத்தை இயக்கிய ஆடம் தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், முக்தா பானு உள்ளிட்டோர் நடித்த பாம்பு சட்டை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்தப் படம் பார்த்த பலரும் இயக்குநர் ஆடம் தாசனைப் பாராட்டியுள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார் பிரபல இயக்குநர் பா ரஞ்சித். பார்த்தவுடன் இயக்குநர் ஆடம்தாசனை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

படம் குறித்து பா ரஞ்சித் கூறுகையில், "நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவரும் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய படம் இது. மிகத் துணிச்சலான கதை, பாத்திரப் படைப்பு அருமை,", என்றார்.

Comments

Popular posts from this blog

போலி பட்டம் வழங்கிய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி ஆஜர்!

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு