போலி பட்டம் வழங்கிய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி ஆஜர்!

கல்லூரியில் போலி பட்டம் வழங்கிய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி கோர்டில் ஆஜராக உள்ளார். நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா. இவர் தன் தந்தையுடன் இணைந்து ஊட்டியில் மெரிட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இதில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர்.
Image result for actor srikanth wife vandana
இதில் படித்த உடுமலைபேட்டை மாணவன் பிருத்விராஜ் கடந்த 2012ம் ஆண்டு ஊட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் " மெரிட் இண்டர்நேஷனல் கல்லூரியில் நான் படித்தேன். நான்கு ஆண்டுகள் படித்தால் மூன்று பட்டங்கள் கிடைக்கும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Image result for actor srikanth wife vandana
எனது படிப்பு முடிந்தவுடன் தபாலில் பட்டத்தை அனுப்பி வைத்தனர். அந்த பட்டத்தை கொண்டு இண்டர்வியூவிற்கு சென்றபோது அதை அவர்கள் போலி என்றனர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அண்ணா பல்கலை கழகம் சென்று விசாரித்தேன்.
Image result for actor srikanth wife vandana
அவர்கள் அதை உறுதி செய்தனர். இதனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்தார்.
Image result for actor srikanth wife vandana
அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் பட்டம் வழங்கியிதால் போலி பட்டமாகிவிட்டது என கல்லூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகிகளான ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா, அவரது தந்தை சாரங்கபாணி ஆகியோருக்கு பலமுறை சம்மன் அனுப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.
Image result for actor srikanth wife vandana
கடைசியாக பிடி வாரண்ட் பிறப்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் வந்தனாவும், சாரங்கபாணியும் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கை வரும் ஏப்ரல் 18க்கு கோர்ட் தள்ளிவைத்தது.

Comments

Popular posts from this blog

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

பாம்புச் சட்டை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு!