வேல்முருகன் மீது லைக்கா மான நஷ்ட வழக்கு ( என்ன கொடும சார் இது )

          ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படத்தை லைக்கா நிறுவனம்தயரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த செய்தி.  இந்த நிலையில் இலங்கை வவுனியாவில் லைக்கா நிறுவனம் கட்டியுள்ள வீடுகளை வரும் 9-ம் தேதி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் திருகரங்களால் தருவதாக இருந்தது.

          இந்த நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தனது பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்.

          இதற்கிடையே தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது லைக்கா.

          கடந்த 25-ம் தேதி, நியூஸ் 18 சேனல்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன், ராஜபக்சேவிற்கும்லைக்காவிற்கும் தொடர்பிருப்பதாக கூறியதாகவும். ஆனால், அப்படி எந்தசம்பந்தமும் தங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ள லைக்கா, இதனால் தங்கள்வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.  ( என்ன கொடும சார் இது ) .


            வேல்முருகன் தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்டு, ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடாக வழங்கவேண்டுமென்றும் வேல்முருகனுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

போலி பட்டம் வழங்கிய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி ஆஜர்!

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

பாம்புச் சட்டை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு!