Posts

Showing posts from March, 2017

கவண் மலேசியா செய்தியாளர் சந்திப்பு புகைப்படம்

Image

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

Image
நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, அவர்களும் அடிக்கல்லை நாட்டினர். ரஜினி, கமல் இவ்விழாவில் தாமதமாக கலந்துகொள்வார்கள் என்று கூறினர். இந்நிலையில், சரியாக 11.30 மணியளவில் இந்த விழாவில் கமல் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். மலேசியா பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு 12.00 மணிக்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வருகை தந்த ரஜினியும், புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதையடுத்து கமல் பேசும்போது, நடிகர் சங்க கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த கட்டிடம் கலைஞர்களின் கோட்டையாக மாறும் என்றும் கூறின...

அட்டு விமர்சனம்

Image
நாயகன் ரிஷி ரித்விக் , யோகி பாபு உள்ளிட்ட 4 நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர் . அவர்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லாததால் , நண்பர்கள் 4 பேரும் வடசென்னையில் உள்ள குப்பமேட்டிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர் . அதேநேரத்தில் , அந்த பகுதியின் கவுன்சிலர் இவர்களுக்கு ஒருசில வேலைகளை கொடுக்கிறார் . அதேபோல் பிரச்சனைகளில் சிக்கும் இவர்களை காப்பாற்றவும் செய்கிறார் . நாயகியான அர்ச்சனா ரவியை அவளது பள்ளிப்பருவத்தில் நடந்த பிரச்சினையில் இருந்து ரிஷி காப்பாற்றியதால் , அர்ச்சனாவுக்கு அவர்மீது காதல் வருகிறது . முதலில் அவளது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் ரிஷி , பின்னர் தனது நண்பர்களின் வற்புறுத்தலால் சம்மதம் தெரிவிக்கிறான் . இந்நிலையில் , போதைபொருள் விற்பனை செய்யும் கும்பல் ஒன்று , போலீசிடம் இருந்து தப்பிக்க குப்பைமேட்டில் போதைபொருட்களை வீசிச் செல்கிறது . இந்த போதைபொருட்கள் நாயகனான ரிஷியிடம் சிக்குகிறது . அவனிடம் போதை பொருள் சிக்கிக் கொண்ட அறிவும் அந்த கும்பல் , அதை மீட்க ரிஷியை கொலை செய்ய முயற்சி செய்கிறது...

பாம்புச் சட்டை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு!

Image
பாம்புச் சட்டை படம் பார்த்துவிட்டு, அந்தப் படத்தை இயக்கிய ஆடம் தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டுத் தெரிவித்துள்ளார். பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், முக்தா பானு உள்ளிட்டோர் நடித்த பாம்பு சட்டை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் பார்த்த பலரும் இயக்குநர் ஆடம் தாசனைப் பாராட்டியுள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார் பிரபல இயக்குநர் பா ரஞ்சித். பார்த்தவுடன் இயக்குநர் ஆடம்தாசனை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். படம் குறித்து பா ரஞ்சித் கூறுகையில், "நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவரும் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய படம் இது. மிகத் துணிச்சலான கதை, பாத்திரப் படைப்பு அருமை,", என்றார்.

வேல்முருகன் மீது லைக்கா மான நஷ்ட வழக்கு ( என்ன கொடும சார் இது )

Image
          ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படத்தை லைக்கா நிறுவனம்தயரித்து வருவது நாம் அனைவரும் அறிந்த செய்தி.  இந்த நிலையில் இலங்கை வவுனியாவில் லைக்கா நிறுவனம் கட்டியுள்ள வீடுகளை வரும் 9-ம் தேதி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் திருகரங்களால் தருவதாக இருந்தது.           இந்த நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தனது பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்.           இதற்கிடையே தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது லைக்கா.           கடந்த 25-ம் தேதி, நியூஸ் 18 சேனல்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன், ராஜபக்சேவிற்கும்லைக்காவிற்கும் தொடர்பிருப்பதாக கூறியதாகவும். ஆனால், அப்படி எந்தசம்பந்தமும் தங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ள லைக்கா, இதனால் தங்கள்வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.  ( என்ன கொடும சார் இது ) .         ...

பாகுபலி-2 டிக்கெட்டுகள் : 6 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது..!

Image
இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி-2 படம், ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் படம் வெளிவரும் நாளுக்கு முந்தைய நாளின் பிரீமியர் ஷோ காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு, உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் துவங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள பாகுபலி-2 படத்தின் பிரீமியர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளின் முன்பதிவு துவங்கியது. மொத்தம் 450 டிக்கெட்டுகள் விற்பனைக்கு இருந்தன. இதன் விலை அதிகமாக இருந்தாலும், முன் பதிவு துவங்கிய 6 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனை சற்று எதிர்பார்க்கவில்லை என பாகுபலி-2 படத்தின் ஆஸ்திரேலிய நாட்டிற்கான விநியோகஸ்தர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் படம் வெளியாகும் அன்று 370 டிக்கெட்டுகள் விற்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போலி பட்டம் வழங்கிய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி ஆஜர்!

Image
கல்லூரியில் போலி பட்டம் வழங்கிய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி கோர்டில் ஆஜராக உள்ளார். நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா. இவர் தன் தந்தையுடன் இணைந்து ஊட்டியில் மெரிட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இதில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் படித்த உடுமலைபேட்டை மாணவன் பிருத்விராஜ் கடந்த 2012ம் ஆண்டு ஊட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் " மெரிட் இண்டர்நேஷனல் கல்லூரியில் நான் படித்தேன். நான்கு ஆண்டுகள் படித்தால் மூன்று பட்டங்கள் கிடைக்கும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எனது படிப்பு முடிந்தவுடன் தபாலில் பட்டத்தை அனுப்பி வைத்தனர். அந்த பட்டத்தை கொண்டு இண்டர்வியூவிற்கு சென்றபோது அதை அவர்கள் போலி என்றனர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அண்ணா பல்கலை கழகம் சென்று விசாரித்தேன். அவர்கள் அதை உறுதி செய்தனர். இதனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்தார். அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் பட்டம் வழங்கியிதால் போலி பட்டமாகிவிட்டது என கல்லூரி மீத...

இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா சூர்யா? வைரலாகும் வீடியோ

Image
நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக  பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு வழிபாடு நடத்துவதுபோலவும், அங்குள்ளவர்கள் சூர்யாவுக்கு மதச்சடங்குகள் செய்வதுபோலவும் இருக்கிறது. இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, சூர்யா மதம் மாறியுள்ளதாக வெளியாகியுள்ள அந்த வீடியோ, சிங்கம்-2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வந்தபோது, ஏ.ஆர்.ரகுமான் விடுத்த அழைப்பின்பேரில் கடப்பாவில் உள்ள தர்காவிற்கு அவர் சென்றதாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாக பரவி வருவதாகவும் கூறியுள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவலை பரப்பினர். ஆனால், சூர்யா தரப்பில் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யா எந்த மதத்திற்கும் மாறவில்லை என்றும், அதுகுறித்து வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்ப...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா....

Image
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு காலி மனையாக இருக்கிறது. இந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள் அறிவித்தனர். நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் செங்கல் வழங்குகிறார்கள். கட்டிட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. நடிகர்கள் புதிய படங்களில் நடித்து சம்பள தொகையை கட்டிட நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர். ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளில் இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1,000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் போன்றவையும் இங்கு அமைய உள்ளன. இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்து உள்ளது. இதைத்தொடர்ந்து...

Kavan Movie Stills

Image
                      Kavan Movie Stills